இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை
ஏன் என்று யோசிக்கும் போது தான் அவனின் சிந்தனை...... யார் அவன் ?
எதற்காக இவ்வளவு அக்கறை எடுக்க வேண்டும்? என்னை பற்றி ஏன் பேச வேண்டும் ? நான் ஏன் அவனை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறேன் ? அவனை பற்றி ஏன் யோசிக்க வேண்டும்? யாரை பற்றியும் யோசிக்க மாட்டேன் இவனை பற்றி மட்டும் ஏன்? என்று அந்த இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் போனது ஜனனிக்கு.....
காலையில் மறுபடியும் அவனை நினைத்து கொண்டு பஸ்ஸ்டாப்புக்கு செல்கிறாள் ஜனனி ....
ஆமாம் நேற்று என்ன நடந்தது ? என்று மறுபடியும் யோசிக்க தொடங்கிவிட்டால் ..... அவள் அருகே ஒரு ஆண் அமரவரும் பொழுது இவளுக்கு ஒரு மாதிரி பயமும் கூச்சமும் சுற்றி முற்றி பார்க்கிறாள் அவனும் இவள் அருகே அவர் அமர்ந்து விடக்கூடாது என்று கேட்டு கொள்கிறான் ...... அவள் உடனே இடம் மாறி விடுகிறாள் இவனோ நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவன் நண்பனிடம் சொல்லுகிறான் நல்ல வேலை இவள் எழுந்துவிட்டாள் அவன் நண்பனோ சிரிக்கிறான்.......
பயப்படாதடா எந்த ஒரு பையன் பக்கத்துலையும் அவ உட்கார மாட்டா.... பக்கத்துல கூட நிக்க மாட்டா.... டேய் உனக்கு எப்படி தெரியும்? என்று அவன் கேட்க அவனின் நண்பனோ நா தினமும் பாப்பேன் மச்சான் நல்ல பொண்ணு..... நீ கேக்குறது சரி இல்லயே உண்மையா சொல்லுடா என்ன நடக்குது ? என்று அவன் நண்பன் கேட்க அவன் பதிலுக்கு இல்லடா அந்த பொண்ண எனக்கு பிடிச்சிருக்கு என்று சொல்ல அவன் நண்பன் ஓ! கதை அப்படி போகுதா சரி தான் என்று கிண்டல் செய்து கொண்டான் ..... இதையெல்லாம் கவனிக்காதவள் அவன் அவளை பாரு எப்படி பயந்து பொய் இருக்கானு அவளையும் தப்புனு சொல்ல முடியாது இப்போ எவன் தான் ஒழுங்காக இருக்கான் ? என்று சொன்னதை மட்டும் கேட்டு விட்டாள்.... இது தான் நேற்று நடந்தது இதை பற்றி யோசித்து கொண்டே இருந்தால் கல்லூரிக்கு போகும் பாதையில் .....
திடாரென்று அவன் இன்று வந்திருக்கனா ? என்று தேட ஆரம்பித்து விட்டாள் அவனும் வந்திருந்தான் ..... இவள் தேடியதை பார்த்து அவனுக்கு சந்தோசம் அவள் சட்டென்று திரும்பி கொண்டாள் அந்த ஒரு நொடி பார்வையில் இவன் பரவசம் அடைந்தான் .... இன்றும் முடிந்தது எதுவும் கேட்காமல் பேசாமல் ...
காலையில் மறுபடியும் நேற்று நடந்தது போல் பஸ் ஸ்டாப்பிற்கு செல்கிறாள் அவர்களை பார்க்கிறாள் . இன்று அவனின் நண்பன் அவனை பெயர் கூறி அழைக்கிறான் ''வருண் இங்க வா '' அப்போது தான் ஜனனிக்கு தெரியும் அவன் பெயர் வருண் என்று ஒரு மாதத்திற்கு பிறகு.... இருவரும் ஒரே பேருந்து தான் ஒரு மாதமாக ஆனால் இருவரும் பார்க்க ஆரம்பித்தது கடந்த ஒரு வாரம் தான் ...... வருண் எந்த கல்லூரி என்று தெரியாது ஜனனிக்கு . வருண் கேட்கிறான் "எதுக்கு சக்தி கூப்பிட்டா ?" இல்ல மச்சா இங்க இருந்து பார்த்தா தெளிவா தெரியுது அதான் கூப்பிட்டேன் என்றான் சக்தி . மச்சா என்னோட லவ்க்கு சக்தி , கத்தி எல்லாமே நீ தான் ஐயோ வெற லெவல் டா நீ என்று சந்தோசத்தில் சொன்னான் வருண் ... சரி சரி மச்சான் நீ என்ன புகழ்ந்தது போதும் நீ உன்னோட வேலைய பாரு என்றான் சக்தி. டேய் மச்சா அவ கண்ணு இருக்கே ஐயோ என்னமோ பண்ணுது டா பாத்திட்டே இருக்கணும் போல இருக்கு டா என்று வருண் சொல்ல... இப்ப மட்டும் என்னடா அத தானே பண்ணிட்டு இருக்க அப்ரோ என்ன ? அவன் ஒண்ணுமே இல்லாம சுத்திட்டு இருக்கான் போடா டேய் என்று கிண்டல் செய்தான் சக்தி.... இதை கூட கவனிக்காமல் அவளின் கண்ணை மட்டும் கண் இமைக்காமல் கவனித்து கொண்டு இருந்தான்... ஆனால் அவளோ இவனை கவனிக்காமல் ஜன்னலின் வழியே செல்லும் மரங்களை கவனித்து கொண்டு இருந்தாள்... இப்படியே இன்றும் முடிந்தது .. .
பேருந்தில் ஏறியதும் மனம் வருண் வந்திருப்பரா ? என்று கண்கள் தேடியது ... இன்று மரியாதை கூடுகிறது என்று நினைத்தே சிரித்தாள் மனதிற்குள் ... அவரும் வந்திருந்தார் ... இவ்வளவு பார்த்தார்.......இவள் அருகே இரு இருக்கைகள் காலியாக இருந்தன . அவர்களும் பார்த்தார்கள் அமரவா ? வேண்டாமா ? என்பது குழப்பம். அமர்ந்தால் அவளுக்கு சங்கடமாக இருக்குமோ ? அமர்ந்தால் பேசலாம் என்ன பண்ண என்று யோசிக்கையில் சக்தி சொன்னான் மாப்ள இதான் நல்ல வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்திக்கோ அவ கிட்ட கேளு உட்க்கறவானு ? அவனும் கேட்டான் அவளும் சரி என்பது போல் தலை அசைத்து விட்டாள் . வருணுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோசம் அவனும் அமர்ந்தான். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்தனர் . ஜனனியின் இதய துடிப்பு அவளுக்கே கேட்கும் அளவிற்கு துடித்தது இருந்தாலும் வெளிய காட்டி கொள்ளாமல் வெளிய பார்த்து கொண்டு இருந்தாள்..... வருண் பேச தொடங்கினான் உங்களுக்கு எதுவும் சங்கடமாக இல்லயே ? இல்ல அப்படி எதுவும் இல்லனு ஜனனி சொன்னா . முதல் தடவை அவளின் குரல் கேட்டவன் கொஞ்சம் கிரங்கியே போனான்.. அடுத்த கேள்வியை கேட்க தொடங்கினான் மீண்டும் கிரங்கி போக .... உங்க பெயர் தெரிஞ்சுக்கலாமா ? ஜனனி என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள் .... அவனின் மனதில்
ஜனனி ஜனனி
ஜெகம் நீ ஜெகம் நீனு
பாட்டு கேட்க தொடங்கி விட்டது அது மட்டும் வருண் ஜனனி என்று பெயர் பொருத்தம் பார்க்க தொடங்கி விட்டனர் வருணும் ஜனனியும்.... அப்படியே கேள்வி எழுகிறது ஒருவரை பற்றி ஒருவர் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள் . இப்படியே இந்த நாள் முடிந்தது
அடுத்த ஒரு மாதத்திற்கு அருகில் அமர முடியவில்லை என்றாலும் பார்த்து இருவரும் கண்ணால் கதைகளை பரிமாறினார்கள்... அந்த நாளும் வந்தது அதான் காதலர் தினம் இவர்களுக்கு மீண்டும் அருகில் அமர வாய்ப்பு கிடைத்தது .அவனோ பேருந்து என்று கூட பாராமல்
"தூரத்தில் நாம் நிற்க
என் கண்களோ உன்னை தேட
உன் கண்களோ என்னை தேட
கண்களால் பேசி கொண்டோம்
கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்
வாழ்க்கையையும் பரிமாறி கொள்வோமா?
என்று அவன் திடிர் என்று கேட்க இவளோ திகைத்து போனால்.... ஒரு நிமிடம் யோசித்து காத்திருக்க முடியுமா? என்று கேட்க அவனோ கண்டிப்பா என்று சொல்ல இவளோ மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல்
யாரோ என்று இருந்தவன்
என்னவன் ஆவானா ?
இல்லை மீண்டும்
யாரோ என்று போவானா ? என்று யோசித்து கொண்டு இருக்கும் போது
கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து விட்டாள் ஜனனி.......
